குடியேறிகளை திருப்பி அனுப்புவோம்! அயர்லாந்தின் சூடான திட்டம் பரிசீலனை
ருவாண்டா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பும் அவசர சட்டத்தை அயர்லாந்து பரிசீலித்து வருகிறது.
ருவாண்டா சட்டத்தல் அயர்லாந்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பிரித்தானிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதாவிற்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்தின் வழியாக வரும் அடைக்கலம் தேடுபவர்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப அவசர சட்டத்தை அயர்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.
இந்த மசோதா, சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவதை அனுமதிக்கிறது.
அயர்லாந்தில் அண்மையில் அடைக்கலம் கோரி வந்தவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், வடக்கு அயர்லாந்துடனான திறந்தவெளி எல்லையைக் கடந்து வந்தவர்கள் என்று அயர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் Helen McEntee தெரிவித்தார்.
பிரித்தானியாவின் ருவாண்டா கொள்கை, ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க விரும்பும் குடியேற்றவாசிகளை அயர்லாந்தில் அடைக்கலம் கோருவதற்கு தூண்டுகிறது என்று அயர்லாந்து அதிகாரிகள் கருதுகின்றனர்.
அவசர சட்டத்திற்கு பரிசீலனை
ஐக்கிய இராச்சியத்தின் கொள்கை, அடைக்கலம் தேடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் அண்டை நாடுகளுக்கு சுமையைக் கடத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டது என்று அயர்லாந்தின் துணை பிரதம மந்திரி மைக்கேல் மார்ட்டின் நம்புகிறார். "அதுவே அவர்கள் எதிர்பார்த்த விளைவாக இருக்கலாம்" என்று அவர் The Daily Telegraph-க்கு தெரிவித்தார்.
"திறமையான குடியேற்ற கட்டமைப்பையும், முறையையும்" அயர்லாந்து அரசு விரும்புகிறது என்றும், இந்த பிரச்சனையை விவாதிப்பதற்காக திங்கட்கிழமை பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளிவர்லியை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் Helen McEntee தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தால் முன்மொழியப்பட்ட சட்டம், அடைக்கலம் தேடுபவர்களுக்கான "பாதுகாப்பான மூன்றாவது நாடு" என்று பிரித்தானியாயை அறிவிக்கும், இதன் மூலம் அவர்களை பிரித்தானியாவில் கையாள்வதற்காக அயர்லாந்து திருப்பி அனுப்ப அனுமதிக்கும்.
ஆனால் இது சிக்கலான அணுகுமுறையாகும், மேலும் சாத்தியமான சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |