4 பந்துகளில் 4 விக்கெட்... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த அயர்லாந்து வீரர்! வைரலாகும் வீடியோ
டி20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அயர்லாந்து வீரர் Curtis Campher வரலாறு படைத்தார்.
இன்று (செப்டம்ர் 18) ரவுண்டு 1 சுற்றில் ‘பி’ பிரிவில் நடந்த முதல் போட்டியில் அயர்லாந்து-நெதர்லாந்து அணிகள் மோதின.
அபுதாபியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.
107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி> 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் 2 புள்ளிகளுடன் அயர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
நெதர்லாந்து இன்னிங்ஸில் 10வது ஓவர் வீசிய அயர்லாந்து பந்துவீச்சாளர் Curtis Campher 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷித் கான், இலங்கை ஜாம்பவான் லிசித் மலிங்கா ஆகியோருக்கு அடுத்தபடியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை Curtis Campher படைத்துள்ளார்.
அதேபோல், டி20 உலகக் கோப்பையில் பிரெட் லீக்குப் பிறகு ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை Curtis Campher படைத்துள்ளார்.
பிரெட் லீ 2007ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில் வங்க தேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
நெதர்லாந்து வீரர்கள் Colin Ackermann (11), Ryan ten Doeschate (0) மற்றும் Scott Edwards (0) ஆகியோரை அடுத்தடுத்த 3 பந்துகளில் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய Curtis Campher, அடுத்த பந்தில் Roelof van der Merwe-யும் (0) அவுட்டாகி 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
Curtis Campher bags Double Hat-trick🤩#CurtisCampher #T20WorldCup #IREvNED pic.twitter.com/7YxT4CXQbc
— Harshal Barot (@HarshalBarot7) October 18, 2021
நான்கு விக்கெட்களில் முதல் விக்கெட் மற்றும் 3வது விக்கெட் டிஆர்எஸ் மூலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.