எந்த அணியும் செய்யாத புதிய வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அயர்லாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அயர்லாந்து வெற்றி
புலவாயாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணியை வீழ்த்தியது.
முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260 ஓட்டங்களும், ஜிம்பாப்பே 267 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து 298 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் 292 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 228 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வரலாற்று சாதனை
இந்த வெற்றி அயர்லாந்து அணி தொடர்ச்சியாக பெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி ஆகும். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளிலேயே அயர்லாந்து இதனை செய்துள்ளது.
![சாம்பியன்ஸ் டிராஃபியில் பாகிஸ்தான் நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தாக மாறும்: முன்னாள் அவுஸ்திரேலிய ஜாம்பவான்](https://cdn.ibcstack.com/article/62c33684-4a54-42c2-9e1b-6d06c212b153/25-67aadf7edf813-sm.webp)
சாம்பியன்ஸ் டிராஃபியில் பாகிஸ்தான் நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தாக மாறும்: முன்னாள் அவுஸ்திரேலிய ஜாம்பவான்
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற அணி எனும் இமாலய சாதனையை அயர்லாந்து படைத்துள்ளது.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணி 14 டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |