இலங்கை வந்தடைந்த அயர்லாந்து வீரர்கள்..மிரட்டல் வீரரின் தலைமையில் களமிறங்கும் அணி
ஆண்ட்ரு பால்பிர்னியின் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடருக்காக இலங்கை வந்தடைந்துள்ளது.
டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் இலங்கை அணி 16ஆம் திகதி அயர்லாந்துக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதற்காக அயர்லாந்து அணி வீரர்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளனர். ஆண்ட்ரு பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
@Twitter (ICC)
@Twitter (OfficialSLC)
பால் ஸ்டிர்லிங்
அயர்லாந்தின் தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும், இரண்டாவது டெஸ்ட்டில் அணியுடன் இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter/@BLACKCAPS
ஆண்ட்ரு பால்பிரினி 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், 91 ஒருநாள் மற்றும் 88 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். எனவே இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@icc-cricket.com