டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து: 2வது போட்டியிலும் மண்ணை கவ்விய இந்தியா
அயர்லாந்து எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
அயர்லாந்து முதல் பேட்டிங்
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது.
முதல் போட்டியில் ஏற்கனவே தோல்வியடைந்து இருந்த இந்திய அணி, இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் குவித்தது.
அயர்லாந்து அணியில் ஹேரி டெக்டர் 47 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
Relive the final moments as Ireland Men sealed the series against India ☘️#BackingGreen | #IREvIND | #FailteSolar pic.twitter.com/K8MUb2sb3O
— Cricket Ireland (@cricketireland) June 28, 2026
மண்ணை கவ்விய இந்திய அணி
155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
பின்னர் வந்த இஷான் கிஷான் 12 ஓட்டங்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 10 ஓட்டங்களும் குவித்து வெளியேறினர்.

திலக் வர்மா மட்டும் சிறப்பாக விளையாடி 55 ஓட்டங்கள் சேர்த்தார். இருப்பினும் இந்திய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன்மூலம் அயர்லாந்து அணி இந்த போட்டியை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |