கடைசி பந்தில் திரில் வெற்றி! முத்தரப்பு டி20 தொடரை கைப்பற்றிய அயர்லாந்து
நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
ஸ்போர்ட்ஸ் பார்க் வெஸ்ட்லைட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நெதர்லாந்து முதலில் துடுப்பாடியது. பால்பிரிணி 5 ஓட்டங்களிலும், டக்கர் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த டெக்டர் ஒரு ரன்னில் வெளியேறினார்.
எனினும் அணித்தலைவர் ஸ்டிர்லிங் 27 பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த கேம்பர் மற்றும் டாக்ரெல் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
இதன்மூலம் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் குவித்தது. டாக்ரெல் 30 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார். கேம்பர் 30 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் வான் பீக், மீகெரென் மற்றும் லீடே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ டௌட் அதிரடியில் மிரட்டினர்.
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்தது. லெவிட் 34 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். சிக்ஸர்களை பறக்கவிட்ட மேக்ஸ் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் குவித்தார்.
????? ??????????? ?
— Cricket?Netherlands (@KNCBcricket) May 24, 2024
Max O’Dowd made 6️⃣0️⃣ T20I runs in the final game of the Nordek Tri-Series.#kncbcricket #nordek #nordektriseries #performance #nedvire pic.twitter.com/s2WU6r6FHZ
அதன் பின்னர் அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் 12 ஓட்டங்களில் வெளியேற, விக்ரம்ஜித் 27 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆனால் லீடே ஒரு ரன் மட்டுமே எடுக்க, அயர்லாந்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |