YouTube இல் ஆரம்பித்த சண்டை; பிரபல யூடியூபர் இர்பானால் தவறான முடிவு எடுத்தாரா பிரியாணி மேன்?
பிரபல யூடியூபர் இர்பானிற்கும் பிரியாணிமேன் அபிஷேக் ரபிக்கும் இடையில் YouTube இல் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பிரியாணிமேன் அபிஷேக் ரபி நேரலையில் தவறான முடிவு எடுக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
YouTube இல் முற்றிய சண்டை
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கின்றனர். அதற்கு அனைவரும் பயன்படுத்தும் ஒரு தளமாக YouTube இருக்கிறது. இதில் பலரும் தங்களது வாழ்வில் நடக்கும் விடயத்தை வீடியோவாக எடுத்து பகிர்ந்துக்கொள்வர்.
ஒரு சிலர் நாட்டில் நடக்கும் விடயத்தை பற்றி பேசுவார்கள். அந்தவகையில் தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய விதத்தில் மக்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் பல வீடியோக்களை யூடியூபர் இர்ஃபான் தனது சேனலில் பதிவேற்றுவது வழக்கம்.
2009 இல் YouTube பயணத்தைத் தொடங்கிய இவர், அவரது சில வீடியோக்கள் வைரலாகியதனால் யூடியூப்பை ஒரு தொழிலாக செய்ய முடிவு செய்தார்.
இவரது சேனலில் பெரும்பாலான வீடியோக்கள் உணவு சார்ந்தே இருக்கும். பல உணவு விமர்சன வீடியோக்களை வெளியிடுவதே வழக்கம்.
இதுபோலவே பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் அபிஷேக் ரபி. இவர் உணவுகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை போடுவது இல்லை.
அதற்கு பதிலாக கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களை முன்வைப்பதே இவரது வழக்கம்.
இவர் பல யூடியூபர்களை வைத்து தான் வீடியோ செய்து வந்தார். அதாவது சமீபத்தில் வைரலாகிய டெய்லர் அக்கா என அழைக்கப்படும் பெண் தயாளு குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர்கள் இடையிலும் சண்டை ஆரம்பித்தது.
அதையடுத்து யூடியூபர் இர்பான் கார் விபத்து குறித்து பேசியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த காரை இர்பான் ஒட்டி வரவில்லை எனவும், அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
குறித்த விபத்து நிகழ்ந்து முடிந்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜூன் 22 ஆம் திகதி பிரியாணி மேன் என்ற சேனலில் அபிஷேக் ரபி கார் விபத்து குறித்து பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
குறித்த வீடியோவில், இர்பான் பல சர்சையில் சிக்கியிருக்கிறார். ஆனால் அதிலிருந்து அவர் எப்படி சுலபமாகத் தப்பித்து விடுகிறார் என பேசியிருந்தார்.
குழந்தையின் பாலினத்தை குறித்து வெளியிட்ட வீடியோ குறித்தும் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி இர்பான் ரிவ்யூ செய்த ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறித்தும் பேசியிருந்தார். இந்த வீடியோவானது வைரலாகியது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு மாதம் கழித்து, யூடியூபர் இர்பான் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் சுமத்துவதாக இர்பான் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார்.
தவறான முடிவெடுத்த பிரியாணி மேன்
இவ்வாறு மூவருக்கும் இடையில் YouTube இல் பிரச்சினை சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரியாணி மேன் தனது யூடியூப் சேனலில் நேரலையில் வந்து, தான் தவறான முடிவு எடுக்கவிருப்பதாக தெரிவித்தார்.
நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் உடனே தாயாரை தொலைபேநியில் தொடர்புக்கொண்டு அவரை காப்பாற்றுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தவறான முடிவு எடுப்பதற்கு முயற்சிப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான எண்ணம் தோன்றினால் 104 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் பிரியாணி மேன் யூடியூப் சேனல் வைத்திருக்கும் அபிஷேக் ரபி நேரலையில் தவறான முடிவு எடுத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதால் , அதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |