இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள 3 பிரச்சனைகள்: இர்பான் பதான் தெரிவித்துள்ள அறிவுரைகள்
இந்திய கிரிக்கெட் அணியில் 3 பிரச்சனைகள் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
3 பிரச்சனைகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் 3 முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.
முதலாவதாக, இந்திய கிரிக்கெட் அணியில் பினிஷர் ரோலில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவிற்கு பயிற்சி ஆட்டங்களில் விரைவாக களமிறக்கி அவரை பார்முக்கு கொண்டு வர வேண்டும்.
இதையடுத்து இந்திய அணியில் டெத் பவுலிங் மோசமாக இருப்பதால் அதனை சரி செய்ய பயிற்சி ஆட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, இந்திய அணியின் சரியான காம்பினேஷன் எது என்று பயிற்சி ஆட்டம் முடிவதற்குள் தேர்வு செய்வது என அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணி சிறிய மாற்றங்களை உடனடியாக அடைந்தால் உலக கோப்பை தொடரில் வலுவான அணியாக இருக்கும் இந்தியா திகழும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |