லிஸ் ட்ரஸை கேலி செய்த ஐரிஷ் விமான நிறுவனம்!
அயர்லாந்தின் Ryanair விமான நிறுவனம் லிஸ் ட்ரஸை கடுமையாக கேலி செய்துள்ளது.
45 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் மிகக் குறுகிய கால பிரதமர் ஆனார்.
பிரதமர் பதிவிலிருந்து ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸை அயர்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவனம் ஓன்று கடுமையாக கேலி செய்துள்ளது.
பிரித்தானியாவின் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததை அடுத்து, நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஐரிஷ் விமான நிறுவனமான Ryanair, அவரது பெயரில் ஒரு போர்டிங் பாஸை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், அவர் புறப்படும் இடத்தை லண்டன் என பதிவிட்டு, சேரும் இடத்தை 'Anywhere' என பதிவிட்டு, 'அவர் எங்கோ செல்கிறார்' அல்லது 'அவர் எங்கு செல்கிறார் என்றே தெரியாமல் இருக்கிறார்' என்று கிண்டல் செய்யும் விதத்தில் குறித்துள்ளது.
மேலும், அந்த பாசில் ஒரு QR குறியீட்டை கொடுக்கப்பட்டுள்ளது, அதனை ஸ்கேன் செய்தால் பவுண்டுகள் மற்றும் யூரோக்களுக்கான கூகிளின் நாணய விளக்கப்படத்திற்கு செல்கிறது, இது பவுண்டின் நிகழ்கால மதிப்பை குறிக்கிறது.
அவருக்கான விமான இருக்கை எண் பிரதமர் அலுவலகமான எண்-10, டௌனிங் தெருவை குறிப்பது போல் '10D' என உள்ளது. மேலும், 2 மந்திரிசபை பைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ட்விட்டரில் இந்த போர்டிங் பாஸுடன் "குட்பை" என்பதைக் குறிக்கும் கை அசைக்கும் ஈமோஜியும் சேர்க்கப்பட்டுள்ளது.
— Ryanair (@Ryanair) October 20, 2022