கோல்டன் குளோப் விருதை தட்டித் தூக்கிய Iron Man நாயகன்! வெற்றியாளர்களின் முழு விபரம்
ஹாலிவுட்டின் உயரிய விருதான கோல்டன் குளோப் விருதை நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் பெற்றார்.
81வது கோல்டன் குளோப் விருது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Beverly Hills நகரில் 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நடைபெற்றது.
ஹாலிவுட்டில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக பார்க்கப்படுவது கோல்டன் குளோப் விருது ஆகும். எனவே, எந்தெந்த நடிகர்கள் இவ்விருதை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Oppenheimer திரைப்படம் விருதுகளை அள்ளியது. இப்படத்தில் எதிர்மறை கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்த Iron Man புகழ் நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார்.
சிறந்த நடிகர் விருதை Cilian Murphyயும் (Oppenheimer), சிறந்த இயக்குநர் விருதை கிறிஸ்டோபர் நோலனும் (Oppenheimer), சிறந்த இசைக்கான விருதை Ludwig Goransson-ம் (Oppenheimer) வென்றனர்.
RICH POLK/GOLDEN GLOBES 2024
விருதுகள் விபரம்:
சிறந்த நடிகை (Drama) - Lily Gladstone [Killers of the Flower
சிறந்த திரைப்படம் (Musical/Comedy) - Emma Stone (Poor Things)
சிறந்த நடிகர் (Musical/Comedy) - Paul Giamatti (The Holdovers)
சிறந்த துணை நடிகை - Da'Vine Joy Randolph (The Holdovers)
சிறந்த வசூல் சாதனை படம் - Barbie
சிறந்த அனிமேஷன் படம் - The Boy and the Heron
சிறந்த பாடல் - ''What was i made for?" (Barbie)
சிறந்த ஆங்கிலம் பிறமொழி படம் - Anatomy of a Fall
சிறந்த தொலைக்காட்சி தொடர் (Drama) - Succession
சிறந்த தொலைக்காட்சி தொடர் (Musical/Comedy) - The Bear
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |