ஒழுங்கற்ற மாதவிடாயா? இதனை சீராக்க இதோ சில வழிகள்
Women
menstruation
By Kishanthini
பொதுவாக பெண்கள் வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி அடுத்த 14 நாட்களும் உடலில் சுரக்கும்.
ஆக 28 நாட்கள் முடிவில் மாதவிடாய் சுழற்சி உண்டாகும்.
இந்த நாட்களின் எண்ணிக்கையானது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு 21 நாட்கள் முதல் 35 நாட்கள் இடைவெளியில் உண்டாகக்கூடும்.
இதனை ஒழுங்கற்ற மாதவிடாய் என்று கூறப்படுகின்றது. இன்றைய காலத்தில் பல பெண்கள் இந்த பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
இதனை சமாளிக்க ஒரு உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
- மாதுளை மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது.
- அன்னாசி பழம் மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.
- இஞ்சி டீ மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.
-
கற்றாழை உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
-
பெருஞ்சீரகம் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.
- இலவங்கப்பட்டை பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது. எனவே இதனை எடுத்து கொள்ளலாம்.
-
வெந்தயம் உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.
-
பேரீச்சை நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.
-
விளக்கெண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US