பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு? தமிழக அரசு கொடுத்த விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்?
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல் பரவியது.
அதாவது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விநியோகம் செய்யபட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods தான், பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யையும் விநியோகம் செய்ததாக வதந்திகள் பரவியது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் அறநிலையத்துறை தரப்பில், "பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதற்கான நெய் ஆவினிடம் இருந்தே பெறப்படுகிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |