பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்கிறதா? உருவாகியுள்ள அச்சம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமென பல ஆண்டுகளாக திட்டமிட்டு பிரெக்சிட்டை நிறைவேற்றியது பிரித்தானியா.
ஆனால், தற்போது ஆட்சி நடத்திவரும் லேபர் அரசின் நடவடிக்கைகள், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்கிறதா என்னும் கேள்வியை உருவாக்கியுள்ளன.
மாணவர்களுக்கு தடையில்லா பயண அனுமதி
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல்கலை மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களை, free movement scheme என்னும் திட்டம் மூலம் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அப்படி அந்த மாணவர்களுக்கு அனுமதி அளித்தால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய மாணவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிடும் என பிரெக்சிட் எதிர்ப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்.
பிரெக்சிட் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்னும் அச்சம் அவர்களுக்கு உருவாகி வருகிறது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்ல ஒத்துழைப்பு வேண்டும் என்பது நாட்டின் நன்மைக்காகவே என அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்வது, வளர்ச்சி என்னும் அரசின் முக்கிய இலக்கை அடைய உதவும் என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |