தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் விஷமாகுமா?
நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ள ஒரு உணவு தேங்காய், இதில் சிறிதளவு மாவுச்சத்தும், புரதச்சத்தும் உள்ளது.
இதில் உள்ள 92 சதவீதம் நிறை கொழுப்புகள் எளிதில் ஜீரணமடையக்கூடியது.
பூஞ்சைத்தொற்று, பக்டீரியா தொற்று போன்ற தொற்றுகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு கிருமிநாசினியாகவும் விளங்குகிறது .
தேங்காயை பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும், சமைத்து சாப்பிட்டால் விஷமாகும் என்று சிலர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், அது உண்மையல்ல என குறிப்பிட்டுள்ளார்.
சமைக்கும்பொழுது எவ்வளவு சூடுபடுத்தினாலும் கருகாமலிருக்கும் எண்ணெய் தான் சமைப்பதற்கு உகுந்த எண்ணெயாக கருதப்படுகிறது.
மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் உள்ள நிறை கொழுப்புகள், தேங்காய் எண்ணையை எவ்வளவு சூடுபடுத்தினாலும் கருக்காமலிருக்க செய்யும்.
அதன் தன்மையும் மாறாமலிருக்கும், மேலும் அதில் எவ்வித வேதியியல் மாற்றமும் நிகழாமலிருக்கும்.
எனவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை தாராளமாக சமையலுக்குப் பயன்படுத்தலாம், அது விஷமாகாது என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |