கொரோனா தொற்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா?
கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா?
மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை.
ஆனால் நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
ரத்த அழுத்த மருந்துகள், தொற்றை அதிகப்படுத்துமா?
இரண்டு விதமான மருந்துகள் ஏ.சி.இ. மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில் போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் (லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கொரோனா தொற்றை கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.
வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்?
பாதுகாப்பான வலி நிவாரணியான பாரசிட்டாமலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.