முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா?- மருத்துவரின் கூற்று
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் உயர்தர புரோட்டீன் நிறைந்த முக்கியமான உணவாக முட்டை உள்ளது.
முட்டையை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துகள் கிடைக்கின்றன.
ஆனால் பலர் முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் அதை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் என நினைத்து, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடும் பழக்கம் வைத்துள்ளனர்.
இந்த சந்தேகத்திற்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், உலகின் பல நாடுகளில் முட்டை என்றால் முழு முட்டையையே குறிப்பிடுவார்கள்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பதால் அதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மேலும், கொலஸ்ட்ரால் மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்து என்றும், செல்களின் அமைப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு அது உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

முட்டையின் மஞ்சள் கருவில் நல்ல கொழுப்பு, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற பல சத்துகள் உள்ளன.
இதனால் முட்டையை சாப்பிடும்போது மஞ்சள் கருவை நீக்காமல் முழு முட்டையையே சாப்பிட வேண்டும் என அவர் கூறினார்.
இதய நோயாளிகளும் தினமும் ஒரு முழு முட்டையை சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனவே முட்டை குறித்து உள்ள தவறான நம்பிக்கையை கைவிட்டு, முழு முட்டையை சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |