தீவிர ஐ.எஸ் ஆதரவாளருக்கு பிரித்தானியக் குடியுரிமை: நீதிபதிகள் அளித்த விளக்கம்
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த தீவிர ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதிகள் அளித்துள்ள விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு
தொடர்புடைய நபர் ஆபத்தானவராக இருக்கலாம் என்றும் பிரித்தானியாவில் தாக்குதல்களை நடத்த மற்ற தீவிரவாதிகளை ஊக்குவிக்க வாய்ப்பிருப்பதாகவும் பிரித்தானியப் பாதுகாப்பு சேவை அமைப்புகளின் எச்சரிக்கை இருந்த போதும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நபருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு தற்போது விவாதமாகியுள்ளது. சூடான் நாட்டவரான அந்த நபர் மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டால், அங்குள்ள நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்றே நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
பெயர் வெளியிடப்படாத அந்த சூடான் நாட்டவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது.
மேலும் பல முறை அவர் எந்த சிக்கலும் இன்றி சூடானுக்கும் பிரித்தானியாவுக்கும் பயணமும் மேற்கொண்டுள்ளார். தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளை MI5 எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு... கிராமப்பகுதியில் ரூ 8300 கோடி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்
அந்த நபர் தீவிர ஐ.எஸ் ஆதரவாளர் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பிரித்தானியாவில் பாதுகாப்பாக குடியிருந்து, பரப்புரையை முன்னெடுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
தாக்குதல் நடந்த ஜூலை 7
2018ல் பிரித்தானிய அதிகாரிகல் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் மீண்டும் அவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைந்துள்ளார். இந்த நிலையில் டிசம்பர் மாதம் குடியேற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அவர் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழலாம் என்றும், வாழ்நாள் முழுவதும் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.
2005ல் லண்டன் சுரங்க ரயில் சேவை தாக்குதல் நடந்த ஜூலை 7ம் திகதிக்குப் பிறகு, அந்த நபர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து புகலிடக்கோரிக்கை முன்வைத்துள்ளதும், சூடானுக்கு திருப்பி அனுப்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, 2016 டிசம்பர் முதல் நான்கு மாதங்கள் சூடானில் தங்கியிருந்த அவர் ஐ.எஸ் ஆதரவு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதும் MI5 சேகரித்த தரவுகளில் அம்பலமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |