பதவி விலகுகிறாரா Google CEO சுந்தர் பிச்சை? பின்னணியில் இருக்கும் தலைவர்களின் விவகாரம்
Gemini AI தொழில்நுட்ப கோளாறால் கூகுள் CEO சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
தொழில்நுட்ப உலகில் Google நிறுவனம் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. Google Search Engine, YouTube, Google Pay ஆகியவற்றில் பெரும் அங்கமாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் சில காரணமாக கூகுள் CEO சுந்தர் பிச்சை பதவிக்கு நெருக்கடி இருந்து வருகிறது.
என்ன பிரச்சனை?
கடந்த 2022 -ம் ஆண்டு கூகுளுக்கு போட்டியாக ChatGPTஎனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதன்பின்னர், 2023 -ம் ஆண்டு Bard எனும் தொழில்நுட்பத்தை Google நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பின்னர், இந்த தொழிநுட்பம் வலுப்படுத்தப்பட்டு Gemini AI என்னும் சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்த Gemini AI தொழிநுட்பத்தில் தொழில்நுட்ப கோளாறால் சரிவர செயல்படவில்லை, பயனர்களுக்கு சரியான விடையை கொடுப்பதில்லை. மேலும், புகைப்படத்தை உருவாகும் image generation -ல் தெளிவான புகைப்படங்கள் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணாமாக பிரிட்டன் இளவரசர், போப் ஆண்டவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை சர்ச்சையாக உருவாக்கியதாகவும் குற்றம் எழுந்தது. இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் கூகுள் நிறுவனம் கூறியது.
பின்னர், பணி நீக்கம் காரணமாக கூகுள் CEO சுந்தர் பிச்சை மீது பல விமர்சனங்கள் எழுந்தது. அதோடு, alphabet -ன் பங்குகள் சரிந்ததால் இன்னும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
குறிப்பாக, Gemini AI -ல் மோடி ஒரு பாசிசவாதியா என்று பயனாளர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு, ஆம் அவரது செயல்பாடுகளை வைத்து பார்க்கையில் பாசிசவாதி எனக் கூறியது.
இதற்கு இந்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் Gemini AI சட்டங்களை மீறுகிறது என்று கூறினார். அதற்கு, தொழில்நுட்ப கோளாறுகளால் தவறு நிகழ்ந்துவிட்டது என்று கூகுள் இணை நிறுவனரான Sergey Brin மன்னிப்பு கோரினார்.
பதவி விலகல்?
இந்நிலையில், Gemini AI தொழிநுட்பத்தால் கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததால் தலைமை அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே, Open AI நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சீனிவாஸ் என்பவர், கூகுள் நிறுவனம் நன்றாக செயல்பட வேண்டும் என்றால் சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |