கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்தில் இருக்கிறாரா? சமூகவலைத்தளத்தில் வைரலான குரல் பதிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று வேகமாகி பரவி வருகின்றது.
இந்த குரல் பதிவை பாதுகாப்பு படையின் முன்னாள் பிரதானி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதில் அவர் கூறியுள்ளதாவது, 'ஜனாதிபதி தற்போது விமான நிலையத்தில் இருக்கின்றார். அந்த இடத்திற்கு செல்லுமாறு முடிந்தளவுக்கு இந்த தகவலை பகிரவும். அங்கிருந்து வெளியேற விட வேண்டாம்"
என அந்த குரல் பதிவில் பேசும் நபர் கூறுகிறார்.
இருப்பினும் இந்த குரல் பதிவில் பேசும் நபர் யார் என்ற விடயங்கள் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் விமான நிலையத்தில் பல சொகுசு கார்கள் செல்வதை வெளியான வீடியோவில் காணக் கூடியதாக இருக்கின்றது.