நரை முடி பிரச்சனையா? இதனை கருப்பாக மாற்ற இதோ சில எளிய டிப்ஸ்!
இன்றைய காலம் இளம்வயதினருக்கு பெரும்பிரச்சினையாக நரைமுடி பிரச்சினை உள்ளது.
இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும், ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
நரைமுடி தடுக்க உதவும் எண்ணெய்கள் குறித்து பலவும் பார்த்திருக்கிறோம். அது போல் நரைமுடியை போக்கும் முக்கியமான எண்ணெய் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு நாட்கள் வரை தலை குளியலுக்கு முன்பு பயன்படுத்தி வந்தால் பலனை பார்க்கலாம்.
அந்தவகையில் இந்த எண்ணெய் தயாரிக்கும் முறை, எப்படி பயன்படுத்தலாம் குறித்து பார்க்கலாம்.
தேவையானவை
- கருஞ்சீரக விதைகள்
- நெல்லிக்காய் தூள்
- மருதாணி தூள்
- வெந்தய விதைகள்
- கடுகு எண்ணெய்
செய்முறை
கருஞ்சீரக விதைகள் மற்றும் வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக உலர்த்தி நன்றாக பொடியாக்கவும்.
கடுகு எண்ணெயை மிதமான தீயில் வைத்து இலேசாக சூடாக்கவும். மருதாணியை மட்டும் தவிர்த்து மற்ற பொடிகளை ஒவ்வொன்றாக 2 முதல் 3 நிமிடங்கள் வரை வைத்து சூடேற்றவும்.
இந்த எண்ணெய் இரண்டு முதல் 5 நிமிடங்கள் வரை இருந்தால் போதுமானது. இறுதியாக எண்ணெயில் மருதாணி பொடி சேர்த்து 1நிமிடம் வைத்து இறக்கவும். எண்ணெய் பாத்திரத்தை இறக்கி வைத்து குளிரவைக்கவும்.
பிறகு வெள்ளைத்துணியில் இந்த எண்ணெயை வடிகட்டி விடவும். இதை தலையில் தேய்த்து பிறகு ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இந்த எண்ணெயை இரவு நேரத்தில் தடவி விடுவதன் மூலமும் நரைமுடிக்கு தீர்வு காணலாம்.
இரவு நேரத்தில் இந்த எண்ணெயை மயிர்க்கால்கள் மற்றும் நுனிமுடியில் முழுக்க படரும் படி நன்றாக தடவவும். குறிப்பாக வெள்ளை முடி அதிகம் இருக்கும் இடங்களில் தடவி எடுக்கவும்.
பிறகு ஹேர் கவர் போட்டு விடவும். மறுநாள் காலையில் ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வெள்ளை முடியின் நிறம் ஓரளவு மங்கி இருப்பதை பார்க்க முடியும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை முடி நாளடைவில் கருமையடையவதை பார்க்கலாம்.