தேன் நெல்லிக்காய் உண்மையில் ஆரோக்கியமானதா?- மருத்துவர் கூறும் விளக்கம்
தேன் நெல்லிக்காய் என்பது பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு உணவு.
பலரும் உடல் ஆரோக்கியத்திற்க்காகவும், வைட்டமின் சி கிடைப்பதற்காகவும் தேன் நெல்லிக்காயை எடுத்துக்கொள்கிறார்கள்.
தேன் நெல்லிக்காய் உண்மையில் ஆரோக்கியமானதா? என மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.
இதனை எப்படி செய்வது?
முதலில் மலை நெல்லிக்காயை 20 நிமிடம் நீராவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனில் சிறு சிறு கீறல்களாக போட்டு அதில் தேன் ஊற்றி கலக்கவும்.
அடுத்து இதனை கண்ணாடி குடுவையில் போட்டு 5- 7 நாட்களுக்கு வெயிலில் வைத்தால் தேன் நெல்லிக்காய் தயார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
100g நெல்லிக்காயில் கிட்டத்தட்ட 450g வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதேபோல் மற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் குறைந்தளவு உள்ளது.
உண்மையில் தேன் நெல்லிக்காயை தயாரிக்கும்பொழுது, நெல்லிக்காயை வேகவைக்கும் முறையில் 75% வைட்டமின் சி போய்விடும்.
அடுத்து வேகவைத்த நெல்லிக்காயை வெயிலில் வைக்கும்பொழுது மீதி இருக்கு வைட்டமின் சியும் போய்விடும்.
எனவே, வைட்டமின் சி கிடைப்பதற்காக தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதாக நினைத்தால் அது பலன் அளிக்காது.
நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் முழுவதுமாக வைட்டமின் சி கிடைக்கும். சுவைக்காக வேண்டுமானால் தேன் நெல்லிக்காயை சாப்பிடலாம் என்று விளக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |