ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? கவலையை விடுங்க... இதோ சில எளிய தீர்வுகள்
மாதவிடாய் சுழற்சி என்பது பொதுவாக பெண் பருவமடைதலில் தொடங்கி அதாவது 10 முதல் 16 வயதுக்குள் இது தொடங்குகிறது.
பெண் வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி 14 நாட்களும் சுரக்கும். இந்த சுரப்பிகள் முடிந்த 28 வது நாட்களில் மாதவிடாய் சுழற்சி உண்டாகும். இந்த நாட்கள் என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது.
ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி நடைபெற வேண்டும். இது தான் இயல்பானது. அதே நேரம் இது ஒவ்வொவருக்கும் வேறுபடுகிறது.
21 முதல் 35 நாட்களுக்குள் வரக்கூடிய மாதவிடாய் சாதாரணமானது. ஆனால் மாதவிடாய் சுழற்சி 35 நாட்களை கடந்த பிறகு வருவது ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular periods) என்றழைக்கப்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் வரை கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இவர்களுக்கு இரத்தப்போக்கு 5 நாட்கள் நீடிக்கும். ஆனால் இவர்களுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை மாறுபடும்.
இவற்றில் போது அச்சப்படுவது எவ்வித அவசியமும் இல்லை. ஒரு சில இயற்கை வழிகள் கொண்டு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- இஞ்சியை தேநீர் வடிவிலும் உட்கொள்ளலாம் அல்லது சிறிது தேனுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். மேலும், சிறிது தண்ணீரில் இஞ்சியை கொதிக்கவிட்டு அதில் சிறிதளவு சக்கரை சேர்த்து உணவுக்கு பிறகு குடித்துவந்தால் மாதவிடாய் பிரச்சனை தீரும்.
- பப்பாளியில் இருக்கும் கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டி மாதவிடாய் காலத்தை முறையாக்குகிறது. பழமாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம்.
- வெது வெதுப்பான குடிநீரில் சீரகத்தை சேர்த்து குடித்துவர மாதவிடாய் சீராகும். அல்லது உறங்குவதற்கு முன் குடிநீரில் சீரகத்தை சேர்த்துவிட்டு காலையில் குடிப்பது நல்ல பலன் தரும்.
- ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் தீரும். மாதவிடாயின்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை குறைக்க பட்டை உதவும்.
- மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலிகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வு. பாலில் மஞ்சளுடன் தேன் கலந்து குடித்துவர மாதவிடாய் பிரச்சனை மெல்ல நீங்கும்.