நடிகர் விஜயை அதிமுக அழைப்பது இந்த காரணத்திற்கு தான்? அண்ணாமலை விமர்சனம்
இவர் மீது நம்பிக்கை இல்லாததால் தான் நடிகர் விஜயை அதிமுக அழைக்கிறது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த அண்ணாமலை, "நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனிநபர் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்செல்லூர் ராஜூ, நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நல்லது என்று சொல்லியிருக்கிறார். அது எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சட்ட ஒழுங்கை காரணம்காட்டி அதிமுக புறக்கணித்திருப்பதாக கூறும் பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் மட்டும் ஏன் போட்டியிட்டார்கள்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |