நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடுவது நல்லதா?
பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள்.
இருப்பினும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா? இல்லையா என்ற சந்தேகம் இருக்கும்.
தற்போது இதனை எடுத்து கொள்வது நன்மையா? தீமையா என்று பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாமா?
ஆப்பிளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 4.8 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது, ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் ஆகவுள்ளது. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.
சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு அழகாகவும், இனிப்பான சுவை கொண்டவையாக இருந்தாலும், பச்சை நிற ஆப்பிளில் குறைந்த அளவு சர்க்கரை, அதிக நார்ச்சத்து மற்றும் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளது, இதனை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.
வேறு நன்மைகள்
ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் நிறைந்துள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிளில் உள்ள நீர்சத்து உங்களது வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருவதால் நீங்கள் அதிகப்படியான உணவுகள் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை ஆரோக்கியம் சிறப்பாக செயல்படுகிறது.
ஆப்பிளை உணவுடன் சேர்த்து சாப்பிடாமல் காலை அல்லது மாலையில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும்போது அதன் முழு பலனையும் பெறலாம்.