உடல் எடையை இப்படி கூட குறைக்கலாமா? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!
பொதுவாக காய்கறிகளில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்றால் அது உருளைக்கிழங்காகத் தான் இருக்கும். ஆனால் சிலர் உருளைக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமனை உண்டாக்கும் என்று நினைத்து சாப்பிட மறுக்கின்றனர்.
ஆனால் உண்மையில் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
குறிப்பாக இது உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி சேர்த்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
- யோகார்ட் - 1மீடியம் அளவு கப்
- உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வேக வைத்த உருளைக்கிழங்குடன் போதுமான அளவு யோகார்ட்டை கலக்க வேண்டும்.
பிறகு உப்பு சேர்த்து நன்கு இந்த கலவையை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் இரவு உணவாக 2 மாதங்கள் சாப்பிட வேண்டும்.
நன்மைகள்
- உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து மற்றும் கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது. எனவே உங்கள் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.
- யோகார்ட் அல்லது தயிரில் அதிகமான புரோட்டீன்ஸ் மற்றும் கால்சியம் உள்ளது. புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான வலுவான தசைகள் கிடைக்கச் செய்து உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- உருளைக்கிழங்கு மற்றும் யோகார்ட் குறைந்த அளவு கலோரிகளை கொண்ட உணவுப் பொருட்கள் என்பதால் உங்கள் உடல் எடையை எந்த விதத்திலும் பாதிக்காது.
குறிப்பு
இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.