5 நாளில் மூலம் வேரோடு சரியாகனுமா? இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றினாலே போதும்!
வெளியே சொல்ல தயக்கம் காட்டும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. வழக்கம் போல் உணவு பழக்கம் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதே இந்நோய் ஏற்பட காரணமாகிறது.
இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நோய் முற்றிய நிலையில் மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவதுடன் கடுமையான வலியும் இருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்து நல்லதாகும்.
அந்தவகையில் மூல நோயை சரி செய்யக்கூடிய ஒரு அற்புத பாட்டி வைத்திய முறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- சின்ன வெங்காயம் 15-20
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
-
ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
-
பிறகு உப்பு சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வதக்கவும். சுடான 1 கப் அரிசியுடன் வதக்கிய வெங்காயத்தையுடன் சேர்த்து மதிய நேரம் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வரலாம்.
-
இந்த வதக்கிய வெங்காயத்தை காலைவேளையில் கூட சாப்பிடலாம். இதனை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து வந்தாலே மூல நோய் சரியாகும்.