இது போன்று அமர்ந்து மலம் கழித்தால் இவ்வளவு ஆபத்து உள்ளதா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தினால் நமது வாழ்க்கை முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அதில் முக்கியமான ஒன்று நாம் மலம் கழிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெஸ்டர்ன் டாய்லெட்.
மலம் கழிப்பதில் சிறந்த டாய்லெட் எது?
அன்றாடம் நாம் மலம் கழிக்க பயன்படுத்தும் சாதாரண டாய்லெட்டை விட வெஸ்டர்ன் டாய்லெட் அதிக ஆரோக்கியமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியினால், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
ஆனால் அந்த டாய்லெட்டில் மலம் கழிக்க அமரும் போது, தரையில் கால் வைத்துக் கொள்ளும் ஒரு பலகையை போட்டு படத்தில் காட்டியவாறு 35 டிகிரியில் உள்ளதை போன்று அமர்ந்தால், பல உடல் ரீதியான பிரச்சனையை தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிக்கும் போது, 90 டிகிரி போன்று நேராக அமர்வதால், நமது உடம்பின் தசைகள் இறுக்கம் அடைந்து அசௌகரியத்தை உணரக்கூடும்.
தசைகள் இறுக்கம் அடைவதால், மலம் கழிக்க முடியாத பிரச்சனைகள் ஏற்படும்.
இதனால் சீரற்ற குடலியக்கம், பெருங்குடல் பாதிப்பு, புற்றுநோய், குடல் அழற்சி மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முக்கிய குறிப்பு
அன்றாடம் மலம் கழிக்கும் போது சாதாரண டாய்லெட்டை பயன்படுத்துவது, நல்ல சௌகரியத்தை உணர்வதுடன், உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.
எனவே வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தினாலும், படத்தில் காட்டியவாறு கால் பகுதிக்கு ஒரு பலகையை வைத்து 35 டிகிரி அமைப்பை போன்று அமர்வது உடல் நலத்திற்கு நலம் பெயர்க்கும்.