சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா?
முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.
பலாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, புரதம், விட்டமின் சி, ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது. இந்த பழம் மிகவும் நன்மைபயக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக காணப்படுகிறது.
இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பழத்தினை எடுத்து கொள்ளலாமா? கூடாதா என்ற சந்தேகம் காணப்படும். உண்மையில் சர்க்கரை நோயாளிகள் பலாபழம் சாப்பிட்டால் ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும் என்று கூறுப்படுகின்றது.
ஏனெனில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா?
- பழுத்த மற்றும் பழுக்காத பலாப்பழங்கள் இரண்டும் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டுள்ளன. அவை நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவுகின்றன. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- பலாப்பழம் குளுக்கோஸை குறைக்கும் ஆற்றல் வாய்ந்த விளைவைக் கொண்டுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம், குறிப்பாக சில நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் உட்கொண்டால் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தலாம்.
- பலாப்பழம் பழுத்தவுடன், பழத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் மற்றும் மாவுச்சத்து அதிகரிக்கும்.இது அதிக அளவு உட்கொண்டால் நீரிழிவு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
- பலாப்பழம் மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரை அளவைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கலாம்.