இளவரசர் ஹரியும் மேகனும் மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழாவில் பங்கேற்கிறார்களா?: உறுதிசெய்யப்பட்ட தகவல்
இளவரசர் ஹரியும் மேகனும் மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழாவில் பங்கேற்பார்களா இல்லையா என்னும் கேள்வி நிலவிவரும் நிலையில், அதுகுறித்த உறுதிசெய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மன்னரின் முடிசூட்டுவிழாவில் ஹரி மேகன் கலந்துகொள்வது குறித்த திட்டம்
மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழாவில் இளவரசர் ஹரியும் மேகனும் பங்கேற்பார்கள் என்றொரு உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக பிரித்தானிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Image: AFP via Getty Images
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, இத்தனை பிரச்சினைகளுக்குப் பின்னும், தனது முடிசூட்டுவிழாவில் தனது இளைய மகன் ஹரி இருந்தே ஆக வேண்டும் என எண்ணுகிறாராம்.
தனது இரண்டு மகன்களையும் தனது முடிசூட்டுவிழாவில் பங்கேற்க வைக்க மன்னர் தன்னாலானவற்றை செய்துவருவதாகவும், முடிந்தவரை முடிசூட்டுவிழா சுமூகமாக நடந்துமுடியவேண்டும் என அவர் விரும்புவதாகவும் அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சி, ராஜ குடும்பம் ஒன்று சேர்வதற்கான நடவடிக்கையின் முதல் படி என்றும் ராஜ குடும்ப நிபுணர்கள் விமர்சித்துள்ளார்கள்.
Image: Getty Images