சுவிட்சர்லாந்திலேயே ஆபத்தான நகரம் எது?
2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல தலைசிறந்த 10 நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்திலேயே ஆபத்தான நகரம் எது என்னும் ரீதியில் பிரபல சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலேயே ஆபத்தான நகரம் எது?
லோசான் நகரம் சுவிட்சர்லாந்திலேயே ஆபத்தான நகரமா? என்னும் தலைப்பில் அந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஃபெடரல் குற்றவியல் தரவுகள், பலவகையான குற்றங்களை சேர்த்து பட்டியலிடுவதால் லோசான் நகருக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் வந்திருப்பதாகக் கூறும் உள்ளூர் அதிகாரிகள், உண்மையில், Solothurn போன்ற சிறிய நகரங்கள்தான் அபாயகரமான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பதாகக் கூறுகிறார்கள்.
இன்னொரு பக்கம், இளைஞர்களின் வன்முறை மற்றும் போதைக்கடத்தல் ஆகிய விடயங்களால் லோசான் நகரில் சமீபத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை மறுக்கமுடியாது.
என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, குற்றச்செயல்கள் குறைவே என்று கூறும் உள்ளூர் அதிகாரிகள், அந்த நிலை தொடரும் வகையில் தாங்கள் கவனமாக தங்கள் கடமையைச் செய்துவருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |