டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி
இந்தியாவில் தாக்குதல் நடத்த உள்ளதாக 2 வாரம் முன்பு LeT அமைப்பின் தளபதி எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே நேற்று மாலை 6:52 மணியளவில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சதி இருப்பதாக கருதி, உபா பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை, பயங்கரவாத தடுப்பு பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

விசாரணையில், குண்டுவெடிப்பு நடந்த கார் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்குச் சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இந்த கார் கடைசியாக ஃபரிதாபாத்தில் இருந்து வந்துள்ளது.
ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் பறிமுதல்
அன்றைய தினம் காலையில் டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத்தில் 350 கிலோ வெடிமருந்து மற்றும் துப்பாக்கி, தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் முஜாமில் சகீல், ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த மருத்துவர் அடில் அகமது உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அத்துடன் பயங்கரவாத தாக்குதல் நடத்த லக்னோ, டெல்லி, அகமதாபாத் சென்று உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்
இதனால், இந்த தாக்குதல் அவசரகதியில் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தைபா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) அமைப்புகள், இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக முன்னதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையிலே இந்த தேடுதல் வேட்டை மற்றும் கைது படலங்கள் நடைபெற்றுள்ளன.
பின்னனியில் லஷ்கர் அமைப்பு?
கடந்த மாத இறுதியில், Let அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா சைஃப் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அக்டோபர் 30 ஆம் தேதி பாகிஸ்தானின் கைர்பூர் தமேவாலியில் நடைபெற்ற பேரணியில் பேசிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா சைஃப், "லஷ்கர்-இ-தொய்பா தளபதி சைஃபுல்லா சைஃப், ஹபீஸ் சயீத் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. வங்கதேசம் வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டு வருகிறார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலளிக்கத் தயாராகி வருகிறார். அங்கு அவர் ஜிஹாத் என்ற பெயரில் இளைஞர்களைத் தூண்டி வருகிறார். இப்போது அமெரிக்கா நம்முடன் உள்ளது. வெங்கடேசமும் நம்முடன் நெருங்கி வருகிறது" என பேசியுள்ளார்.
அதே போல் இந்த தாக்குதலின் பின்னணியில், பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) இருப்பதாகக் கூறும் பதிவு வைரலாகி வருகிறது.
இந்த பதிவில், "இந்தியத் தலைநகரான புது தில்லி இன்று, நவம்பர் 10, 2025 அன்று மாலை 5 மணிக்கு, துணிச்சலான மற்றும் கடுமையான லஷ்கர்-இ-தொய்பா புலிகளால் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பிலால் மசூதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்து பனியாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடவுளுக்குப் புகழாரம். ல ஷ்கர்-இ-தொய்பா ஒவ்வொரு மசூதிக்கும் பழிவாங்கி, ஒவ்வொரு கோயிலையும் சென்றடைய சபதம் செய்கிறது. காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை, இந்தியா அழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தாக்குதலின் பின்னனியில் ஹபீஸ் சயீத் பங்கு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |