தவறான இளவரசனை திருமணம் செய்ததால் பிரித்தானியா அரச குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் மேகன்! சர்ச்சையை கிளப்பிய எம்.பி
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் குறித்து அவுஸ்திரேலிய எம்.பி கூறிய கருத்து கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஓப்ராவுடனான நேர்காணலில் மேகன், பிரித்தானியா முடியாட்சி குறித்து சரமாரி குற்றம்சாட்டியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒளிபரப்பாகி இரண்டு நாட்களுக்கு பிறகு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தால் அவுஸ்திரேலிய எம்.பி Jarrod Bleijie கடும் விமர்சனத்திற்கு அளாகியுள்ளார்.
பிரித்தானியாவின் அடுத்த மன்னர் ஹரி இல்லை வில்லியம் தான் என அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலிடம் தெரிவித்த பிறகு தான் பிரச்சினை தொடங்கியது.
அப்போது தான் அவர் தவறான இளவரசரை மணந்துவிட்டோம் என்பதை உணர்ந்தார். எனவே அவர் வருங்கால ராணியாக முடியாவிட்டால், அவர் அரச குடும்பத்தை தகர்க்க முயற்சிப்பார் என சர்ச்சையாக பதிவிட்டார்.
The problem started when American actress Meghan Markle was told William would be King not Harry. It was at this time that she realised that she married the wrong Prince. So if she can't be the future Queen, she'll attempt to take down the institution. The Crown will prevail!
— Jarrod Bleijie (@JarrodBleijieMP) March 9, 2021
Jarrod Bleijie-யின் பதிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Jarrod Bleijie-யின் கருத்தால் தான் அதிருப்தியடைந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின்