சமந்தாவை நாகசைத்தன்யா விவாகரத்து செய்கிறாரா? ஜீவானம்சம் குறித்து தீயாய் பரவும் தகவல்
கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப்போகின்றார் என்று வதந்திகள் இணையதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போது சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பை மீறியே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தார் என்றும், இதுவே பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்க 4 முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
தற்போது இச்செய்திக சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.