சுவிஸ் 10 மில்லியன் வாக்கெடுப்பை பிரெக்சிட்டுடன் ஒப்பிடும் அரசியல் நிபுணர்கள்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள ’மக்கள்தொகையை 10 மில்லியனாக்கவேண்டாம்’ என்னும் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பை, பிரெக்சிட்டுடன் ஒப்பிட்டுள்ளார்கள் அரசியல் நிபுணர்கள்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

பிரெக்சிட்டுடன் ஒப்பிடும் நிபுணர்கள்
இந்நிலையில், அந்த வாக்கெடுப்பை பிரெக்சிட்டுடன் ஒப்பிட்டுள்ள அரசியல் நிபுணர்கள், பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளார்கள்.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது உண்மைதான் என்றாலும், ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல, சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னும் பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லாப் போக்குவரத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
இந்நிலையில், No to 10 Million Switzerland என்னும் பிரேரணைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் Economiesuisse என்னும் தொழிலாளர்கள் ஆதரவு அமைப்பு, பிரச்சாரத்துக்காக 4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் அதிகமாக செலவு செய்துவருவதாகவும், அந்த பிரேரணை நாட்டின் செழிப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |