தங்க விலை உயர்வுக்கு இந்த நிறுவனம் காரணமா? - வாரத்திற்கு டன் கணக்கில் தங்கம் வாங்கும் Tether
சாமானிய மக்கள் வாங்க முடியாதளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் பின்னணியில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டன் கணக்கில் தங்கம் வாங்கும் Tether
ஆனால், உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இணையாக தனியார் நிறுவனம் ஒன்று தங்கத்தை வாங்கி பதுக்கி வருகிறது.

கிரிப்டோ சந்தையில் ஸ்டேபிள்காயின்(USDT) வைத்துள்ள டெதர் (Tether) நிறுவனம் வாரத்திற்கு 2 டன் தங்கம் கொள்முதல் செய்து வருகிறது.
இது ஒவ்வொரு மாதமும், ஒரு பில்லியன் டொலருக்கு அதிகமான கொள்முதலுக்கு சமம் ஆகும்.

இது குறித்து பேசிய தலைமை நிர்வாக அதிகாரி பாவ்லோ அர்டோயினோ, "இதே வேகத்தில் இன்னும் சில வாரங்களுக்கு தங்கத்தை வாங்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
140 டன் தங்க இருப்பு
இந்த தங்க கொள்முதல்களை, சுவிட்சர்லாந்தில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட முன்னாள் அணுசக்தி பதுங்கு குழியில் பதுக்கி வைத்துள்ளது டெதர் நிறுவனம்.

தற்போது டெதர் 140 டன் தங்க இருப்பை வைத்துள்ளது. இதன் மதிப்பு 24 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அவுஸ்திரேலியா, கத்தார் போன்ற நாடுகளின் தங்கம் வாங்கும் வேகத்தை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய வங்கிகளுக்கு அடுத்தபடியாக அதிக தங்க இருப்பு வைத்துள்ள நிறுவனமாக டெதர் உருவெடுத்துள்ளது.
தங்க விலை அதிகரிப்பிற்கு டெதரின் பாரிய தங்க கொள்முதலும் ஒரு காரணம் என Jeffries நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |