கொரில்லா போரினால் எதிரிகளை அஞ்ச வைத்த தமிழன் அவர்
மதமும் மொழியும் தான் தமிழர்களையும் சிங்களவர்களையும் பாகுபடுத்தி பார்க்கிறதா என்று லங்காசிறி நெறியாளர் டில்ஷான் எழுப்பிய கேள்விக்கு இந்திய வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.
வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரனுடன் நேர்காணல்
மதமும் மொழியும் தான் தமிழர்களையும் சிங்களவர்களையும் பாகுபடுத்தி பார்க்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன், தமிழில் நிறைய சைவர்கள் இருக்கிறார்கள், அடுத்ததாக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் சேர்க்க வேண்டும் என்றால் மொழியை வைத்து மட்டுமே சேர்க்க முடியும்.
இவர்களுக்குள் பாகுபாட்டை உருவாக்க வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1915-லேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை சிங்களவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எனவே தமிழை தாய்மொழியாக கொண்ட சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒரே அணியில் சேர்வதை தடுப்பதற்கு பல பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கு பல தமிழர்களும் இரையாவதுண்டு, எனவே நமக்குள் இருக்கும் சாதிய பாகுபாடு, இன பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக் கூடிய பாகுபாடு அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு, நாம் அனைவரும் மொழியால் ஒன்றுபட வேண்டும் என இந்திய வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.
இதுப்போன்று நெறியாளர் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்திய வரலாற்று ஆய்வாளர் ராஜேந்திரன் பதிலளித்துள்ளார், அது தொடர்பான முழு வீடியோ இந்த செய்தி தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |