அண்ணன் தம்பிக்கிடையிலான பிரிவு முடிவுக்கு வருகிறதா?: இளவரசர்கள் ஹரி வில்லியம் சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரித்தானிய இளவரசி டயானாவின் பிறந்த நாளான ஜூலை 1ஆம் திகதி அன்று, பிரித்தானிய இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைந்து தங்கள் தாயின் உருவச்சிலை ஒன்றைத் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
வெளி உலகுக்கு அவர்கள் தோளோடு தோளாக நின்று தங்கள் தாயின் சிலை திறப்பு நிகழ்ச்சியை நடத்தினாலும், ஹரியும் மேகனும் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிளவு இருந்துகொண்டேதான் உள்ளது.
ஆகவே, நாளை தங்கள் தாயின் சிலையைத் திறந்துவைத்தபின், சகோதரர்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ள இருக்கிறார்கள்.
தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் துறப்பதற்கு விருப்பம் தெரிவிப்பதன் அடையாளமாக, நாளை தங்கள் தாயின் சிலையை திறந்துவைத்தபின், தனிப்பட்ட முறையில் ஹரியும் வில்லியமும் சந்தித்துப் பேசிக்கொள்ள இருப்பதாக The Daily Telegraph பத்திரிகை தெரிவித்துள்ளது.