சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடையா? நடத்தப்பட்ட வாக்கெடுப்பு: வெளியான முழு விபரம்
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவது குறித்து வாக்கெடுப்பு நடந்துள்ளது.
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
சில ஐரோப்பிய நாடுகளில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தும் இதை நடைமுறைப் படுத்தும் நோக்கில் வாக்கெட்டுப்பு நடத்தவுள்ளது.
சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டும் என்ற முடிவுக்கு அதிகளவில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தடை விதிப்பதற்கான முன்மொழிதலுக்கு சுவிட்சர்லாந்து அரசே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. இருப்பினும், இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த தடை அமலுக்கு வந்தால் சில விலக்குகளும் கொடுக்கப்படும் என்ற கூறப்படுகிறது/. சுவிட்சர்லாந்து, மக்கள் தொகையில் 5.5 சதவிகித மக்கள் தான் இஸ்லாமியர்கள்.
ஆனாலும், இந்த தடைக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதரவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[BS0FPT]