உங்களுக்கு கழுத்து மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா? இதனை எப்படி போக்கலாம்?
பொதுவாக நம்மில் பலருக்கு கழுத்து மட்டும் கருமையாக காணப்படுவதுண்டு. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக கருமை உண்டாக ஹார்மோன் மாற்றங்கள், சரும இறந்த செல்கள் அதிகமாக தேங்கி இருப்பது என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
அழுக்குகளும் இறந்த செல்களும் அப்படியே படிந்து படிந்து தடித்த கருமையை ஏற்படுத்திவிடும்.
இதை வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு சரிசெய்யலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கடலைமாவு - 2 ஸ்பூன்
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் கடலைமாவுடன் மஞ்சள் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தும் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு ஸ்மூத் பேஸ்ட்டாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை கழுத்தில் கருமை உள்ள பகுதிகளில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.
பின் நன்கு வட்ட வடிவில் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வர மிக வேகமாக கழுத்துக் கருமை நீங்கும்.