உச்சந்தலை அரிச்சிக்கிட்டே இருக்கா? இதை எப்படி போக்கலாம்?
Hair Tips
Scalp itchy
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி உச்சந் தலை அரிப்பு ஏற்படுவது வழக்கம்.
இது பொடுகு, பேன் தொல்லை போன்றவற்றின் காரணமாக இந்த உச்சந் தலை அரிப்பு ஏற்படலாம். உச்சந்தலை அரிப்பு தொடர்ச்சியாக இருந்தால், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லதாகும்.
அதிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தும் போது இந்த உச்சந் தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.
- ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டீஸ்பூன் நீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை கழுவவும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
- ஒரு தேக்கரண்டி புதினா எண்ணெய் உடன், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலையைக் கழுவி கொள்ளவும். இதன் பயன்களை முழுமையாகப் பெறுவதற்கு வாரம் இருமுறை இது போன்று செய்யலாம்.
- கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். பின்னர் அதனை தலையில் நேரடியாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடம் ஊறவைத்து, வெது வெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரம் இருமுறை செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.
- வெங்காயத்தை நன்றாக அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை சுத்தமான பருத்தித் துணியால் நனைத்து உங்கள் தலையில் தடவிக் கொள்ளவும்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து தலையை வெது வெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர இந்த உச்சந்தலை அரிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- வேப்ப இலைகளை நன்றாக வேகவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாற்றை பிழிந்து தலையில் மசாஜ் செய்யவும். சுமார் 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவிக் கொள்ளவும் அல்லது தினசரி வேப்ப இலை ஜூஸ் அருந்துவது தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
-
தூங்க செல்வதற்கு முன் சிறிது ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடு செய்து தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். பின்னர் காலையில் வெதுவெதுப்பான நீரில் தலையை நன்றாக கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்வது இது போன்ற தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் வளர்க்க உதவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US