சருமம் கருமையாக இருக்கிறதா?கவலையை விடுங்க.. இதே அசத்தலான டிப்ஸ்
மாசு நிறைந்த சூழலில் சருமத்தை பொலிவோடு, துாய்மையாக பேணுதல் என்பது மிகவும் சவாலானதொன்றாக இருக்கிறது.
உருளைக்கிழங்கை சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தமுடியும்.
உருளைக்கிழங்கிலுள்ள உயர் இரும்புச்சத்து சரும கருமையை நீக்க மற்றும் பளபளவென பிரகாசமாக மாற்றிட உதவுகிறது.
உருளைக்கிழங்கிலுள்ள அசைலிக் அசிட் சருமத்தை பிரகாசப்படுத்த உதவும் மூலகமாக உள்ளது.
கருவளையப்பிரச்சினைக்கு
உருளைக்கிழங்கினை துண்டுகளாக வெட்டி குளிரூட்டியில் வைத்து,கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் காணப்படும் பகுதிகளில் பூச,இரண்டே வாரங்களில் கருவளையங்கள் மற்றும் வீக்கத்தின் தோற்றங்கள் குறையும்.
வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு
உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு காட்டன் பஞ்சி எடுத்து கொண்டு, இந்த சாறில் நனைத்து உங்கள் முகத்தில் தேய்க்கவும். பின்பு 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ, வெயில் தாக்கத்தினால் ஏற்பட்ட கருமையான சருமம், பொலிவுடன் காணப்படும்.
சரும வறட்சியை நீக்க
உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி 40 நிமிடம் வரை காத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும்.
கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு
உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில், இந்த கலவையை தடவி 15 நிமிடம் வரை வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கரும்புள்ளி பிரச்சனை சரியாகும்.