சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக உள்ளதா? இதனை தடுக்க இதோ எளிய வழி!
வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்சனை.
நாம் சாப்பிடும் உணவில் பலவிதமான எண்ணெய்கள், அஜிணமோட்டோ இது அதிகமாக சேரும் போது ஒவ்வாமை வந்து விடும். சிலருக்கு வாந்தி, வயிறு ஊதிக்கொண்டே போகும், நெஞ்சுவலி போன்றவை வரக்கூடும்.
எனவே இவற்றை உடனடியாக போக்க ஒரு சில கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவற்றில் ஒன்றை தற்போது பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு -3
- சிவப்பு கொய்யா
- மலைத்தேன்
- ஓமம் - 1/2 ஸ்பூன்
- திப்பிலி -3
செய்முறை
முதலில் ஓமம், மிளகு , திப்பிலி போன்றவற்றை நன்றாக இடித்து பொடி பண்ணி கொள்ளவும். பிறகு சிவப்பு கொய்யா சிறிது சிறிது நறுக்கி வைத்து கொள்ளவும்.
பிறகு இடித்து வைத்திருக்கும் அந்த பொடியை சேர்த்து மலைத்தேன் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து ஒருவேளை சாப்பிட்டு வரவும்.
இதனால் வயிறு உப்பிசம் சரியாகும், மலச்சிக்கல் நீங்கும், மலம் கழிக்க இலகுவாக இருக்கும்.