முகத்துல சுருக்கம் நிறைய இருக்கா ? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்! விரைவில் பலன் கிடைக்கும்
beauty tips
pimple
wrinkles
By Kishanthini
இஞ்சி சமையலுக்கு, ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பிரச்சினைகளை போக்கவும் உதவுகின்றதாக கூறப்படுகின்றது.
இஞ்சியில் ஆக்ஸிஜனேற்றங்கள் தவிர, வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சருமத்துக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
இஞ்சி எல்லா சருமத்துக்கும் பயனளிக்கும். சருமத்தில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் முகத்தில் முகப்பரு, சரும எரிச்சல், சரும சுருக்கம் போன்ற பல பிரச்சினைக்கு தீர்வளிக்கின்றது.
அந்தவகையில் இஞ்சியை எப்படி சரும பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
- இஞ்சியை மண் போக அலசி தோல் நீக்கி வட்ட வடிவில் நறுக்கி எரிச்சல் இருக்கும் இடங்களில் தேய்த்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
- இஞ்சி பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையிலிருந்து சருமத்துக்கு நிவாரணம் அளிக்கிறது. அதோடு முகப்பரு மற்றும் சொறி உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது. முகப்பரு தீவிரமாகாமல் தடுத்து நிறுத்த இஞ்சி உதவும்.
- இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைக்கவும். இதை பொடியாக்கி வைக்கவும். பிறகு 1 டீஸ்பூன் இஞ்சித்தூளுடன் ஒரு டீஸ்பூன் தேன், சந்தனம் 2 டீஸ்பூன், எலுமிச்சைச் ஆறு சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கி அதை முகத்தில் தடவி விடவும். குறிப்பாக சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவி வைக்கவும்.
- சருமத்துக்கு டோனராக இஞ்சியை பயன்படுத்தலாம். இந்த டோனர் ஒளிரும் சருமத்தை கொடுக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதற்கு இஞ்சியை சுத்தம் செய்து தோலை நீக்கி அதை அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இதை காற்றுபுகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். சுத்தமான காட்டனை நனைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். இதை இரவு படுக்கைக்கு போகும் முன்பு தடவி மறுநாள் காலையிலும் கழுவி எடுக்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US