நிலவில் உண்மையாகவே பிளாட்டினம் இருக்கிறதா? இஸ்ரோ முன்னாள் தலைவர் விளக்கம்
நிலவில் பிளாட்டினம் இருப்பதாக பரவும் தகவல் உண்மையா என்ற கேள்விக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
நிலவில் பிளாட்டினம்?
திருச்சியில் உள்ள இந்திரா காந்தி பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் திருச்சிக்கு வருகை தந்திருந்தார்.
பின்னர் அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்னிந்தியா சாதனை படைத்துள்ளது.
இதனால் சந்திரயான்- 4 மற்றும் சந்திரயான்-5-க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், 2040-ம் ஆண்டில் இந்திய விண்வெளி மையத்தில் இருந்து நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முழுவீச்சில் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா சார்பில் ராக்கெட் தயார் செய்யப்பட்டு NGLV ( Next Generation Launch Vehicle) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இஸ்ரோவில் மட்டுமல்லாமல் தனியார் ஆராய்ச்சி மையத்திலும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சுனிதா வில்லியம்ஸுக்கும், இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை பிரதமர் நரேந்ந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்துள்ளார்" என்றார்.
மேலும் அவரிடம் நிலவில் பிளாட்டினர் இருப்பதாக பரவும் தகவல் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இதற்காக அஸ்ட்ரோ மைனிங் என்ற புரோகிராம் உள்ளது. இதற்காக பல நாடுகள் வேலை செய்து வருகின்றன.
நாம் அதற்காக வீனஸ் என்ற புரோகிராம் செய்து வருகிறோம். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிளாட்டினம் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள்.
நிலவில் பிளாட்டினம் இல்லை, அதையும் தாண்டி நிறைய இருக்கிறது. அதற்காக வேலை செய்து வருகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |