கோஹ்லி-ஆண்டர்சன் இடையே இப்படி ஒரு பகை இருக்கிறதா? பழி தீர்க்க துடிக்கும் ஆண்டர்சன்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனுக்கும், கோஹ்லிக்கும் இடையே இருக்கும் பகை என்ன என்பது குறித்து வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் கோஹ்லி மற்றும் ஆண்டர்சன் இடையே கடும் போட்டி அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது விராட் கோஹ்லியை நான்குமுறை ஆண்டர்சன் வீழ்த்தினார்.
அந்த தொடரில் கோஹ்லி வெறும் 140 ஓட்டங்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த தொடரில் சுதாரித்துக்கொண்ட கோஹ்லி, ஆண்டர்சன் பந்தை தெளிவாக எதிர்கொண்டு விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.
அதேபோல் 2018-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆண்டர்சன் வசம் தனது விக்கெட்டை இழக்காமல் கோஹ்லி கவனமாக விளையாடினார்.
இதனால், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறைகூட கோஹ்லியின் விக்கெட் எடுக்காததால் ஆண்டர்சன் மீது சில விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதனை சரிக்கட்டவும் கோஹ்லியை வீழ்த்தி பழி தீர்க்கவும் ஆண்டர்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
