தூக்கத்தில் இவ்வளவு விடயம் இருக்கின்றதா?
நல்ல இரவு தூக்கம் என்பது அனைவராலும் வேண்டப்படுவது.
வேலை மற்றும் பொழுதுபோக்கிற்கு பின்னால் ஓடுவதால் தூக்கம் என்பது நம் வாழ்வில் முக்கியம் இல்லாமல் ஆகிவிட்டது.
எனினும், தூக்கம் ஒரு அளவோடு இருக்க வேண்டும்.
உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உணவு மட்டும் இன்றி தூக்கமும் அவசியம்.
தூக்கத்தின் அவசியம்
- உடல் செயல்பாடுகளை பராமரிக்கலாம்.
- தசை திசுக்களை சரிசெய்யலாம்.
- மூளை புதிய தகவல்களை செயலாக்க அனுமதிக்கும்.
- உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
போதுமான தூக்கம் இல்லை என்றால் என்ன நடக்கும்?
- மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- திறனை பாதிக்கும்
எவ்வளவு தூக்கம் தேவை?
- 18லிருந்து 25 வயது வரை தினமும் 7லிருந்து 9 மணி நேரம் வரை தூங்கலாம்.
- ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
மிக ஆழமாகத் தூங்கும்போது உங்கள் எல்லா அடையாளங்களும் மறைந்துபோகின்றன.
நீங்கள் கனவையும் தாண்டி ஆழமான தூக்கத்துக்குச் செல்லும்போது நீங்கள் ஒன்றுமில்லாத்தன்மைக்குச் செல்வீர்கள்.
சரியான தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை, நடுக்கம் போன்ற பல பொதுவான காரணங்கள் உள்ளன.
ரத்த அழுத்தம், இருமல், மனச் சோர்வு முதலியவற்றுக்காகப் பயன்படுத்தும் மருந்துகளால்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.