சாப்பிட்டவுடன் தூக்கம் வந்தால் இந்த நோயா? உஷார் மக்களே
பொதுவாக நம்மில் சிலருக்கு சிலருக்கு சாப்பிட்டவுடனே பயங்கரமாக தூக்கம் வரும்,சோம்பலாக இருக்கும்.
அலுவலகத்தில் கிடைக்கும் இடைவேளையில் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.
இதனை “food coma” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
food coma என்றால் என்ன?
இதன் மருத்துவ பெயர் போஸ்ட்ப்ரான்டியல் சொம்னோலன்ஸ் (postprandial somnolence ) ஆகும்.
இந்த food coma ஏற்பட காரணம் என்னவெனில், கார்போவைதரேட்டுகள் அதிகம் உள்ள உணவானது, இன்சுலினில் ஒரு பெரிய ஸ்பைக்கைத் தூண்டுகிறது.
இது உங்கள் மூளைக்குள் சில கெமிக்கல் இரசாயன எதிர்வினையை துாண்டி,உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
சாப்பிட்டவுடன் மந்தமாக இருக்கும்,மனது ஒத்துழைத்தாலும் உடல் ஒத்துழைக்காது.இது போன்ற அறிகுறிகள் food coma அறிகுறிகள் ஆகும்.
இதனை எவ்வாறு சரி செய்யலாம்?
-
பகல் வேலைகளில் சாப்பிடும் அளவை குறைத்து கொள்ள வேண்டும்,அத்தோடு சீனி சேர்க்கப்பட்ட உணவுகளை பகல் வேளைகளில் தவிர்க்க வேண்டும்.
-
சோறு உட்கொள்ளுவதாக இருந்தால் பகல் வேலைகளில் உட்கொள்ளும் அளவினை குறைத்துக்கொள்ள வேண்டும்.
-
அதிகம் இவ்வுணவுகளை உட்கொள்ளும் வேலையில் food coma ஏற்படும்.
- நீங்கள் அதிகளவு சாப்பிடும்போது அதனை செரிமான படுத்த உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
- இரவில் அதிக நேரம் செல்பேசியை பயன்படுத்தாது 8 மணி நேரம் சரியாக நித்திரைக்கு ஒதுக்குங்கள்.
- ஹெவியான உணவுகளான செரிமானப்பட கடினமான உணவுகளை தவிருங்கள்.
- உண்டவுடன் அமராமல் நடந்து,மற்ற வேலைகள் அல்லது உங்களை உற்சாகப்படுத்தும் விடயங்களை கேளுங்கள். இதனால் மூளையின் உணர்வுகள் தூண்டப்பட்டு தூக்கம்,சோம்பல் ஏற்படுகிறது.
இந்த பழக்க வழக்கங்களை நடைமுறைக்கு கொண்டு வரும்பொழுது உங்களுக்கே மாற்றம் விளங்கும்.