ட்ரூடோ பதவி விலக வலியுறுத்தல்: கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு
கனடாவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ட்ரூடோ கட்சி முக்கியமான இருக்கை ஒன்றை இழந்தது. ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைமையிலிருந்து பதவி விலகவேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
முக்கிய இருக்கையை இழந்த ட்ரூடோ கட்சி
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.
The Canadian Press/Christinne Muschi
கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.
Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul's தொகுதியக் கைப்பற்றியுள்ளார்கள்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ட்ரூடோ?
30 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட Toronto-St. Paul's தொகுதியை கன்சர்வேட்டிவ் கட்சியினர் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியுள்ள ட்ரூடோ, தானும் தனது குழுவினரும், கனேடியர்கள் காணவும் உணரவும் தக்க வகையில் உண்மையான முன்னேற்றத்தை கொடுப்பதற்காக இன்னமும் அதிக அளவில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.
பதவி விலக முடிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
என்றாலும், கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும், ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத லிபரல் கட்சியினர் சிலர் கூறியிருந்தார்கள்.
தற்போது, ட்ரூடோ கட்சித்தலைவராக நீடித்தால், பதவி விலக முடிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ட்ரூடோ தனது செல்வாக்கை இழந்துவிட்டார் என்று கூறியுள்ள அவர்கள், அவர் பதவியில் நீடித்தால், 2025இல் நடைபெறவிருக்கும் தேர்தலில் லேபர் கட்சி தோல்வியைடையும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, ட்ரூடோ கட்சித்தலைவராக தொடர்வாரானால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |