தங்க விலை உயர்வுக்கு ட்ரம்பின் விசா அறிவிப்பு காரணமா? நகை வியாபாரி சொல்வது என்ன
தங்க விலை உயர்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் விசா அறிவிப்பே காரணம் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
அவர் கூறியது
சமீப நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டுகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் நடுத்தர மக்களுக்கு தங்கமானது எட்டாக் கனியாகவே மாறவுள்ளது.
நேற்று மட்டுமே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.85,120 மற்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,640க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்து சவரன் மற்றும் கிராமிற்கு ரூ.84,800 மற்றும் ரூ.10,600க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து வருவது விவாதத்தை தூண்டியுள்ளது.
அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையானது 2240 ரூபாய் உயர்ந்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் விசா அறிவிப்பே காரணம் என்று நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தங்கம் விலை இன்னும் உயரும் என்றும், உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார் ஜெயந்திலால் சலானி.
மேலும் இது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |