BBL தொடரில் விளையாட உள்ள விராட் கோலி? சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் தொடங்கப்பட்ட T20 போட்டியான IPL போட்டிகளுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பல்வேறு நாடுகளும், BBL, CPL, SA20 போன்ற பல்வேறு T20லீக் போட்டிகளை நடத்தி வருகிறது.
T20 லீக் தொடர்கள்
மற்ற நாடுகளில் நடைபெறும் T20லீக் போட்டிகளில், இந்திய வீரர்கள் தவிர்த்து அனைத்து நாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர்.
ஆனால், இந்தியா வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் தவிர்த்து பிற போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே இந்திய வீரர்கள் பிற நாடுகளில் நடத்தப்படும் T20லீக் போட்டிகளில் விளையாட முடியும்.
முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் GT20, ILT20, SA20 உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகின்றனர்.
BBL தொடரில் விராட் கோலி?
சர்வதேச T20 போட்டிகளில் மட்டும் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை RCB அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடத்தும் BBL தொடரில், Sydney Sixers அணிக்காக விராட் கோலி அடுத்த 2 தொடர்களில் விளையாட உள்ளதாக Sydney Sixers அணி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
King Kohli 🤩
— Sydney Sixers (@SixersBBL) March 31, 2025
Virat Kohli is officially a Sixer for the next TWO seasons! ✍️ #LIKEASIXER pic.twitter.com/TE89D4Ar6l
இதனால், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளாரா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
April Fools
— Sydney Sixers (@SixersBBL) April 1, 2025
இதனையடுத்து, சில மணி நேரங்களில் april fool என Sydney Sixers அணி பதிவிட்டு ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |